அனைவருக்கும் வணக்கம்!
இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற விண்மீன்களும் கோள்களும் இருந்தாலும் நமது அறிவியல் உலகம் அறிந்த வரை நமது பூமியில் மட்டுமே உயிர்கள் வாழும் சூழ்நிலை உள்ளது. ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை ஒவ்வொரு உயிர்களும் தாவரங்களும் மற்றும் கனிமங்களும் ஒவ்வொரு குணாதிசயங்களும் பண்புகளும் கொண்டனவாக உள்ளன.
இந்த தகவமைப்புகளும் பண்புகளும் பூமி உருவான காலத்தில் இருந்தே பல்வேறு காலங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தாலும் கூட மனிதன் சிந்திக்கும் ஆற்றலையும் பகுத்தாய்ந்து முடிவெடுக்கும் ஆற்றல் பெற்ற பிறகு இந்த பூமியில் ஏற்படும் மாற்றங்களையும் மனிதனின் எண்ணம் செயல் வாழ்வியல் சூழ்நிலை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை உற்று கவனிக்க தொடங்கிய அதே வேளையில் இந்த பிரபஞ்சத்திலும் பல மாற்றங்களை கவனிக்க தொடங்கினான். வானில் ஒவ்வொரு மாற்றம் ஏற்படும் பொழுதும் அதற்கு ஒத்த நேரத்தில் பூமியிலும் பூமியில் வாழும் உயிர்களிலும் சீதோஷண நிலையிலும் பயிர் பெருக்கத்திலும் இயற்கை சூழ்நிலைகளிலும் மனித குலத்தின் சிந்தனை செயல்கள் ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுவதை கவனித்து ஒப்பீடு செய்ய தொடங்கினான். இவை அனைத்தும் ஒரு சுழற்சி முறையில் செயல்படுவதை அறிந்து பூமியில் ஏற்படும் மாற்றங்களுக்கான கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தெரிவு செய்து அவற்றின் அடிப்படையில் வரக்கூடிய சம்பவங்களை முன்னறிந்து செயல்படும் திறனை வளர்த்துக் கொண்டான்.
நமது முன்னோர் இந்த ஒப்பீட்டு கலையினை ஜோதிடக்கலை என்று உலகிற்கு அளித்தனர். பூமியை சுற்றி இருபத்தி ஏழு நட்சத்திரங்களை உள்ளடக்கிய 12 ராசி மண்டலங்களை பிரித்து அவற்றின் பாதையில் பூமி மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்பது கோள்கள் நகர்வினை அடிப்படையாகக்கொண்டு ஜோதிடம் என்ற இந்த கலையை பயன்படுத்தி பருவ மாற்றங்கள் பயிர் விளைச்சல் பொருளாதாரம் மருத்துவம் தனி மனித வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை பகுத்து வாழ்ந்து வந்தனர். இந்த ஜோதிட கலையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்க முடிவெடுத்து வேதங்களிலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் ஆலயங்கள் ஆன்மீகம் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள்ஆகியவற்றுடன் பிணைத்தே தலைமுறை தலைமுறையாக கொண்டு சேர்த்தனர்.
ஆக ஜோதிடம் என்பது வானில் மாற்றங்கள் ஏற்படும்பொழுது பூமியில் மாற்றங்களை அறியக்கூடிய ஒரு ஒப்பீட்டு கலை என்பதையும் அறிவியல் அடிப்படையில் யூகித்து அறியும் கலை என்று புரிந்து கொள்ளலாம்.
இந்த வலைத்தளத்தின் வாயிலாக ஜோதிடம் ஜாதகம் பிரசன்னம் சகுணம் நாடி எண் கணிதம் ஆகிய சாஸ்திரங்கள் மனிதர்களின் வாழ்வோடு எப்படி செயல்படுகிறது என்பதை எளிமையாக அறிந்து கொள்ளலாம்.
எங்கள் ஜோதிட அமைப்பின் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக ஜாதகம், பிரசன்ன ஆரூடம், பிருகு நந்தி நாடி, எண் கணிதம், வாஸ்து சாஸ்திரம் போன்ற தெளிவான மற்றும் துல்லியமான ஜோதிட கணிப்புகளையும் சேவைகளையும் வழங்கி வருகிறேன்.
ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் மற்றும் பிரசன்ன ஆருடங்களைப் பார்த்த அனுபவத்துடன், எனது வாடிக்கையாளர்களுக்கு சரியான ஜோதிட ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறேன்.
இந்த இணையதளம் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் தொடர்பான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்டது.
தமிழ் பேசும் மக்கள் இந்த இணையதளத்தில் ஆன்லைன் சேவையைப் பெறலாம்.
நன்றி!
Contact us:
M.Sivakumar
Sri Nandheeshwara jothida nilayam,
26, Chinniya gounder street,
West palladam,
Palladam – 641664
Tiruppur District,
Tamil Nadu
Mobile : 9942729002
Email : sivasreenandhi@gmail.com