நியுமராலஜி

ஜோதிட துறையில் எண் கணிதமும் ஒரு முக்கியமான அங்கமாக திகழ்கிறது. 1 முதல் 9 வரை உள்ள எண்கள் 9 கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாம் எண்ணை சூரியனும் இரண்டாம் எண்ணை சந்திரனும் மூன்றாம் எண்ணை குருவும் நான்காம் எண்ணை ராகுவும் ஐந்தாம் எண்ணை புதனும் ஆறாம் எண்ணை சுக்கிரனும் ஏழாம் எண்ணை  கேதுவும் எட்டாம் எண்ணை சனியும் ஒன்பதாம் எண்ணை செவ்வாயும் ஆட்சி செய்கிறார்கள்.

அதே போல ஆங்கில எழுத்துக்களில் எந்தெந்த எழுத்துக்களை எந்தெந்த கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று வகைப்படுத்தி உள்ளனர்.

ஒருவர் பிறந்த ஆங்கில தேதியின்படி எண் கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் அவரின் பிறந்த தேதிக்கு உண்டான அதிர்ஷ்டமான எண்களை கண்டறிந்து அவரின் ஜாதகத்தினையும் ஆராய்ந்து அவருக்கு என்ன பெயரை வைத்தால் அதிர்ஷ்டமானதாக அமையும் என்று ஆய்வு செய்து பெயர் வைத்து தருகிறோம்.

அதிர்ஷ்ட எண் கணித சாஸ்திரத்தின் படி பெயரை அமைத்துக் கொண்டாலோ அல்லது தொழில் நிறுவனங்களுக்கு பெயர் அமைத்தாலோ அல்லது பிறந்த குழந்தைகளுக்கு பெயர் அமைத்துக் கொண்டாலோ அவர்களது வாழ்வில் நவகிரக தோஷங்களுடைய தாக்கங்களும் கர்ம தோஷங்களுடைய தாக்கங்களும் குறைந்து வியாபார வெற்றி, தொழில் வெற்றி மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வளமுடன் வாழ இயலும். 

மேற்படி எண்கணித சேவைகளைப் பெற எங்களை தொடர்பு கொள்ளலாம்.

Scroll to Top